இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொலைகாரன். இந்தப் படத்தில் அவரோடு, நடிகர் அர்ஜூன், நடிகை ஆஷிமா ஆகியோர் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான நன்றி அறிவிப்பு சந்திப்பு சென்னையில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் அர்ஜுன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அந்தப் படத்தின் கதை வித்தியாசமாகவும், ரசிகர்கள் ரசிக்கும்படியாகவும் அது படமாக்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான படங்கள் இதனாலேயே வெற்றி பெறுவதில்லை.
என்னதான் பெரிய நடிகர்கள், கலைஞர்களை வைத்து படம் எடுத்தாலும், கதை சரியில்லை என்றால், படம் வெற்றியடைவது சந்தேகம்தான். விஜய் ஆண்டனி, இந்த விஷயத்தில் படத்தின் வெற்றிக்கான சூட்சமத்தை புரிந்து வைத்திருக்கிறார். சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான படங்களை தந்து, வெற்றி பெறுகிறார். கொலைகாரன் படத்தைப் பொறுத்த வரையில், படம் நன்றாக வரும் என தெரிந்தது. நடித்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார்.
Comments
Post a Comment