பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்தி!

தனது பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் விஜய். இன்று அவரது 45வது பிறந்தநாள் என்பதால், பல்வேறு தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு உங்களுடைய பிறந்தநாள் செய்தி என்ன? என ஒருமுறை கேட்டபோது விஜய் கூறியதாவது,

பிறந்தநாள் கொண்டாடுவதில்லை
என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு வணக்கம்! வழக்கமாக நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன்.
powered by Rubicon Project

இயன்றதை செய்கிறீர்கள்
நீங்களும் ஒரு படி மேலே போய் அந்தந்த ஏரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம், கண்தானம், ரத்ததானம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு தையல் மிஷின், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதை செய்து வருகிறீர்கள்.

பெருமைப்படுகிறேன்
உங்களது இந்த செயல்பாடுகள் எனக்கு சந்தோஷமாகவும், அதேநேரம் பெருமையாகவும் இருக்கிறது. உங்களது இந்த சமூக தொண்டு மேலும் பல மடங்காக உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தால் மட்டுமே முடியும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் சரி, அதில் உறுதியோடும், உண்மையோடும், உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியை பெறுவீர்கள்.
வியர்வைக்கு விலையுண்டு
உங்களுடைய ஒவ்வொருவரின் வியர்வைக்கும் விலையுண்டு. நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெறுவது போல். ஆகவே உண்மையோடு உழையுங்கள் உயர்ந்த இடத்தை பிடியுங்கள். இதுவே உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசாகும்", என விஜய் தெரிவித்துள்ளார்.

Comments