ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்தறீங்க” என நேர்கொண்ட பார்வை' பட டிரைலரில் வசனம் வந்தாலும் தங்களது சண்டையை விஜய், அஜித் ரசிகர்கள் நிறுத்தப் போவதில்லை. மேலே இருக்கும் வசனம் தங்களைத்தான் குறிப்பிடுவதாக நினைத்து விஜய் ரசிகர்கள் நேற்றே அவர்களது மோதலை சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.
என்கேபி டிரைலர் டிரோல்ஸ்' என ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் 'நேர்கொண்ட பார்வை' டிரைலரை எந்த அளவிற்கு கிழித்துத் தொங்கவிட முடியுமா அந்த அளவிற்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக அஜித் பேசும் ஆவேசமான நீதிமன்ற வசனங்களை, வடிவேலுவின் புகழ் பெற்ற காமெடி கதாபாத்திரமான 'வக்கீல் வண்டு முருகன்' கதாபாத்திரத்துடன் இணைத்து பல மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
நேர்கொண்ட பார்வை' டிரைலர் விஜய் படங்களின் முந்தைய டீசர், டிரைலர் சாதனையை முறியடிக்கவில்லை என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். இந்த டிரைலர் தற்போது 50 லட்சம் பார்வைகளையும் 6 லட்சம் லைக்குகளையும் கடந்துள்ளது. அஜித்தின் வித்தியாசமான படங்களிலும், கதாபாத்திரங்களிலும் இந்தப் படம் தனி இடத்தைப் பெறும் என அஜித் ரசிகர்கள் டிரைலரைப் பாராட்டி வருகிறார்கள்.

Comments
Post a Comment