தளபதி விஜய் இன்று தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியாக உள்ளனர். குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றைய தினம், விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் 63 ஆவது படத்தின் பெயர் 'பிகில்' என்றும் ,அதனுடன் சேர்த்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர். விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி சில வாக்குவாதங்கள், சமூகவலைதளங்களில் எழும் நிலையில், தற்போது விஜய் - அஜித் இருவரையும் 'பிகில்' பட போஸ்டரில் உள்ளது போல் உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளனர். இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த புகைப்படம்இதோ:
Comments
Post a Comment