விசில்' என்பதுதான் சென்னைத் தமிழில் 'பிகில்' என்று மாறிப் போனது!

விசில்' என்பதுதான் சென்னைத் தமிழில் 'பிகில்' என்று மாறிப் போனது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'பிகில்' எனப் பெயர் வைத்து நேற்று(ஜூன் 21) மாலை முதல் போஸ்டரையும், நள்ளிரவில் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டார்கள்.

நேற்று காலையிலிருந்தே இந்த முதல் பார்வை வெளியீட்டைப் பற்றி டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கான பதிவுகளைப் போட்டார்கள். 'HBDEminentVijay' என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 21 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டன. அது 72 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளன. அதன் பிறகு மாலையில் படத்தின் பெயரை 'பிகில்' என அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரென்டிங் ஆனது.

தொடர்ந்து பல பிரபலங்கள் 'பிகில்' படத்திற்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். அது தற்போது வரை தொடர்கிறது. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாள் என்பதால் பலரும் டுவிட்டரில் வாழ்த்து சொன்னபடி உள்ளனர்.

இன்று 'happybirthdayThalapathy, Happyyybirthdaythalaivaaaaaa, Thalapathy Vijay Anna' என பலப்பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.

வழக்கம் போலவே விஜய் ரசிகர்களின் செயலுக்கு எதிராக அஜித் ரசிகர்களும் 'என்றும் தல அஜித்' என டிரென்ட் செய்து வருகின்றனர்.

Comments