சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் மகரிஷி ஹிட்: அடுத்த வாய்ப்பை கொடுத்தார் மகேஷ் பாபு!

சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் மகரிஷி. மகேஷ் பாபு நடித்த இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இது மகேஷ் பாபுவிற்கு 25வது படமாகும். இதையொட்டி மகேஷ் பாபு தனது அடுத்த படத்திற்கும் இசை அமைக்கும் வாய்ப்பை தேவி ஸ்ரீபிரசாத்துக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து தேவி ஸ்ரீபிரசாத் கூறியதாவது :

மகரிஷி வெற்றிக்கு காரணமாக அமைந்த மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் பாடல்களும், பின்னணியும் இசையும் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த சூப்பர் ஸ்டார் மகேஷ், இயக்குனர் வம்ஷி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பாக மகேஷ் என்மீது கொண்ட அன்பிற்கும் எனது இசையின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இந்த சந்தோஷமான வேளையில், 'சரிலேறு நீக்கேவாறு' என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்கும் மகேஷ் பாவிற்குஎனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி . என்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்.

Comments