முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்!


பிக் பாஸ் சீசன் 3, நேற்று பிரமாண்டமான என்ட்ரியுடன் துவங்கிவிட்டது. இந்த சீசனுக்கான 15 போட்டியாளர்களும் . ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சென்று விட்டனர்.  முதல் எபிசோடுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த வீடியோவின் படி பிக் பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் மற்றும் எரிவாயு பயன்பாட்டை  கண்காணிக்கும் வகையில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த செய்தியை பிக் பாஸ் அறிவிக்க, மேடை பேச்சை கேட்டது போல பங்கேற்பாளர்கள் கைதட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடையும் பாத்திமாபாபு மற்ற போட்டியாளர்களை கண்டிக்கிறார். ஆக முதல் எபிசோடே கலகட்டப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

Comments