விஜய் சேதுபதியின் இரண்டாம் சிங்கிள் நாளை ரிலீஸ்!

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார்.  இந்த கூட்டணியில் சிந்துபாத் திரைப்படம் உருவாக்கி உள்ளது.  இதில், அஞ்சலி நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இவர்களுடன், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில், ஃபர்ஸ்ட்  சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும்  ஜூன் 21 -ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் நாளை வெளியிடப்பட‌ உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments