விஜய், அஜித், தனூஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டார். மேலும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வரும் ஸ்ரேயா. சமீப காலமாக தான் சென்ற நாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கொலம்பியா சென்றுள்ள ஸ்ரேயா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர், ஆடையில்லாமல் நிற்கும் பெண் போன்ற ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இதனால் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறார் ஸ்ரேயா.
Comments
Post a Comment