தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “!

தெறி-மெர்சல்படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.
 
ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது .
தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர்  நடிக்கின்றனர்.
தளபதி விஜய் அவர்களின் மற்ற திரைப்படங்களில் இருந்து பிகில் படம் தனித்து காணப்படும் . இப்படம்  இந்த ஆண்டு  தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .

Comments