ஐஸ்வர்யா ராஜேசுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி!

நயன்தாராவின் மேலாளரும், விஸ்வாசம் படத்தை வாங்கி வெளியிட்டவருமான கொட்டம்பாடி ராஜேஷ் அடுத்ததாக தயாரித்துள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விருமாண்டி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

இதில் கவுரவ தோற்றத்தில் நடிக்குமாறு விஜய் சேதுபதியை கேட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேசுடன் பிளாஸ்பேக் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர் அதில் நடித்துக்கொடுத்துள்ளார். ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தது குறிப்பிடத்தக்கது.  இது தவிர விஜய்சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளது.

Comments