ஜோதிகாவின் புதிய படம் ‘ராட்சசி!

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.
“நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தை சை.கௌதம்ராஜ் இயக்கி உள்ளார்.
 
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இதில் ராட்சசியாக ஜோதிகா நடிக்கிறார். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க.
ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், ‘ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி’ என்றார்.
அரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும் என்றார்.

Comments