தெறி , மெர்சல், படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ,மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம், பிகில்.தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும், இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை மாதத்துடன் முடிக்க வேண்டும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் 'பிகில்' படத்தின் வியாபாரம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து 'யுனைட்டெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் X ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment