அனுஷ்கா ஷர்மாவை தமிழுக்கு அழைத்த இயக்குனர்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.விராத் கோஹ்லியை திருமணம் செய்த பின்னர் படங்களில்
நடிப்பதை குறைத்து கொண்ட அனுஷ்கா ஷர்மாவை, அவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பரி’ என்ற திகில் படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரையே நடிக்க வைக்க ஒரு பிரபல கோலிவுட் இயக்குனர் தீவிர முயற்சி செய்து வருகிறாராம்.

ஆனால் இன்னும் அவருக்கு அனுஷ்கா ஷர்மா பச்சை கொடி காட்டவில்லை என்று கூறப்படுகிறது.தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, வித்யாபாலன், ஷராதா கபூர், உள்பட பல பாலிவுட் நடிகைகள் தமிழில் நடித்துவிட்ட நிலையில் அனுஷ்கா ஷர்மாவையும் கோலிவுட்டுக்கு அழைக்கும் அந்த பிரபல இயக்குனரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments