நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அஜித்தின் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருவது இணையத்தில் இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிப்பில் மட்டுமின்றி ரசிகர்களிடம் அன்பு காட்டுவதிலும், மரியாதையுடன் பழகுவதிலும் ஜாம்பவானாக இருப்பவர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அன்போடு அழைப்பதும் உண்டு.
திரைப்படங்களில் நடிக்க தொடங்கியது முதல் இன்று வரை தனது குணத்தினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்றால் சந்தேகம் இல்லை. விஜய்க்கு இன்று 45வது பிறந்தநாள்.
இதனை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக சில தியேட்டர்களில் விஜய்யின் தெறி, போக்கிரி, துப்பாக்கி ஆகிய மெகா ஹிட் திரைப்படங்களை திரையிடுகின்றன.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விஜய்யின் 63வது படமான பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வெளியான நொடி முதல் ரசிகர்கள் மட்டுகின்றி பல்வேறு தரப்பு மக்களிடமும் உற்சாக வரவேற்புப் பெற்றது. மேலும் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இதையடுத்து விஜய்க்கு, அஜித் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.

Comments
Post a Comment