நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து யார் மோத போகிறார் தெரியுமா?

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் நடிகர் விஷால். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வகித்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்ட சரத் குமார், ராதாரவியை எதிர்த்து  விஷாலும் நாசரும் போட்டியிட்டனர். விஷால் மற்றும் நாசர் பல்வேறு கருத்துக்களை கூறி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதாக சொல்லி வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.
 
தற்போது 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது, இந்த தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
  
கடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார். ஆனால் தற்போது அவர்களை எதிர்த்து இந்த தடவை போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஆதரவாக பலர் உறுப்பினர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இவர் பதவிக்கு வந்தால் நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளும் உறுப்பினர்களும் நலனிற்கு உழைப்பார்கள் எனவும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

Comments