அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு அளித்தது, ஊடகம்க்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அந்த வேளையில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர்.
அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
ஆனால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது” என அவர் கூறினார்.
Comments
Post a Comment