நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எழில் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு
இறுதிக்கட்டத்தில் உள்ளது
இறுதிக்கட்டத்தில் உள்ளது
இந்த நிலையில் நடிகர் விஷ்ணுவிஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் வேறு எந்த தகவலையும் அவர் பதிவு செய்யாததால் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஜூவாலா குட்டாவுடன் இணைந்து விஷ்ணுவிஷால் பேட்மிண்டன் விளையாட போகிறாரா? அல்லது விஷ்ணுவின் அடுத்த படத்தில் ஜூவாலா குட்டா நாயகியாக நடிக்க போகிறாரா?
அல்லது ஜூவாலா குட்டாவை விஷ்ணு காதலிக்கின்றாரா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு விஷ்ணுவே விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment