நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல திறமைகளை வைத்துள்ளவர் எஸ் ஜே சூர்யா இவர் இயக்குனராக அஜித்தின் வாலி திரைப் படத்தில் தான் அறிமுகமானார் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இவர் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள திரைப்படம் மான்ஸ்டர் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார், இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா சன் தொலைக்காட்சி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ் ஜே சூர்யாவிடம் அஜித், விஜய்யை ஒரே படத்தில் இயக்குவதாக இருந்தால் யார் வில்லன் யார் ஹீரோ என கேட்கப்பட்டது. இதற்கு எஸ் ஜே சூர்யா முதல் பாதியில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் , இரண்டாவது பாதியில் விஜய் வில்லனாகவும் ஹீரோவாகவும் இயக்குவேன் எனக் கூறியிருந்தார்.எஸ் ஜே சூரியா அஜித்தின் வாலி விஜய்யின் குஷி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த இரண்டு திரைப்படமும் ஹிட்டானது அனைவரும் அறிந்தது.
Comments
Post a Comment