நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அஜித் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் சிவாவுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஆகஸ்டு 29-ந்தேதி பூஜையுடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.ஆக்ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவுள்ள நிலையில் எச்.வினோத், போனி கபூர் இருவரும் தற்போது படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment