தர்பாரில் சிவாஜி பட பாணியில் பாட்டு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியிட்டுள்ளார்.‘தர்பார்’ படத்தில் பாடலுடன் கூடிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ஒரே நேரத்தில் ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் படப்பிடிப்புக்கு வருகை தந்திருப்பதாகவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
 
கடந்த 2007ஆம் ஆண்டு இதே ஜூன் 15ஆம் தேதி தான் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ‘அதிரடி தான் மச்சான் மச்சான்’ என்ற பாடல் ஸ்டண்ட் காட்சிகளுடன் இருக்கும். சரியாக 12 ஆண்டுகள் கழித்தே இதேபோன்ற ஒரு சண்டைக்காட்சிகளுடன் கூடிய பாடல் காட்சி ரஜினி படத்தில் இன்று படமாக்கப்படுகிறது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது

Comments