நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுசிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
Comments
Post a Comment