சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சாஹோ,’ வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் பிரபாசுக்கும், ஷ்ரத்தாவுக்கும் இடையே பிரச்னை என்று பேச்சு கிளம்பியுள்ளது.அண்மையில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பிரபாஸ், ஷ்ரத்தா நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு இடையே பிரச்னை இருப்பதை உறுதி செய்வது போன்று இருந்ததாம். பிரபாஸ் காட்சிகளை இயக்குநர் ஒரே டேக்கில் ஓகே செய்தது ஷ்ரத்தாவுக்கு பிடிக்கவில்லையாம். ‘‘என்னை மட்டும் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் நடிக்க வைக்கிறார்கள். பிரபாசுக்கு ஒரே டேக்கா?’’ என்று அவர் கோபப்பட்டுள்ளார்.ஆனால், உண்மையில் பிரபாசும், ஷ்ரத்தாவும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள், இதெல்லாம் சும்மா நடிப்பு என்கிறது படக்குழு.
Comments
Post a Comment