நடிகர் சங்கத்திலும் கள்ள ஓட்டு! பரபரப்பை கிளப்பிய மைக் மோகன்! அதிர்ச்சியில் பிரபலங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, நடிகர் மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் தேர்தல் அதிகாரிகளுடன் நடிகர் மைக் மோகன் வாக்குவாதம் செய்தார் நான் இப்பொழுது தானே வருகிறேன் எப்படி வாக்களிக்க முடியும் என்று கடும்          வாக்குவாத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு சலசலப்பு நிலவியது...
நடிகர் சங்க தேர்தல், அரசியல் தேர்தல்களை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய எதிர்ப்புக்கு மத்தியில், நடந்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியும், அவர்களுக்கு எதிராக இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் களமிறங்கியுள்ளனர்.
 
இன்று  காலை 7 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வரும் இந்த தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் 3,171 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்கள் ஆவர்.
 
இந்நிலையில் வாக்குரிமை பெற்ற நடிகர்களில் ஒருவரான, நடிகர் மைக் மோகன் தன்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற தற்போது தேர்தல் நடந்து வரும், புனித எப்பாஸ் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால்  ஏற்கனவே அவருடைய வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் நடிகர் மைக் மோகன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
நடிகர் சங்க தேர்தலிலும், கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது, பல நடிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Comments