வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது. நடிகர் சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான “மகா” திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு விமானியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் இந்த வார இறுதிக்குள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Comments
Post a Comment