ரசிகர்களை சந்தோஷப்படுத்த முத்த காட்சிகளில் நடிக்க தயார்: டாப்சி!

டாப்சி நடித்துள்ள கேம் ஓவர் படம் திரைக்கு வந்துள்ளது. இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு,, ரசிகர்கள் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து 2, 3 மணிநேரம் ஒதுக்கி எனது படங்களை பார்க்க வருகிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களுக்காகவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
 
நான் எப்போதும் டைரக்டருடைய கதாநாயகி. டைரக்டர்தான் முக்கியம். நாங்கள் அவர் கையில் இருக்கும் கருவிகள். என்னுடைய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் சேரவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ரூ.30, ரூ.40 கோடி வசூலித்தாலே எனக்கு திருப்திதான்.
 
கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இயக்குனர்கள் அதுமாதிரி என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள். தென்னிந்திய ரசிகர்கள் நடிகைகள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.
 
திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமானது. இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை.ஆனால் குழந்தைகள் வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எப்போது குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை தீவிரமாகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன்.இவ்வாறு டாப்சி கூறினார்.
 

Comments