போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ள இநத படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 10 ந்தேதி படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் அதே போனிகபூர், எச்.வினோத் கூட்டணியில் தனது 60-வது படத்திலும் நடிக்கிறார் அஜீத். அந்த படம் அஜீத்திற்கு விருப்பமான பைக் ரேஸ் கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். அஜீத், பைக் ரேஸ் வீரர் என்பதால் இந்த படத்தில் நிஜ பைக் ரேஸ் காட்சிகளும் இடம்பெறப் போகிறதாம்.
மேலும், ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வெளிநாடுகளில்தான் நடை பெற உள்ளது. அதாவது, தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், புடாபெஸ்ட் போன்ற மூன்று கண்டங்களில் அஜீத் 60-வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் இருக்கின்றார், அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார்.
இப்படத்தில் கார் ரேஸை மையப்பட்டுத்தி படம் எடுக்கவுள்ளார்களாம், இப்படத்தை KGF போல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்து ரிலிஸ் செய்யவுள்ளதாக போனிகபூர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Comments
Post a Comment