பரத்தை போன்ற உடலை கேட்டார் தல! அஜித்தின் பயிற்சியாளர் சொன்ன சூப்பர் தகவல்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் டயட் பிளான், பிட்னஸ் போன்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பிட்னஸ் பயிற்சியாளரான சிவா. இவர் தமிழ் சினிமாவில் அர்ஜுன், பரத், அருண் விஜய், லாரன்ஸ் போன்ற பல நடிகர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளாள்ர் சிவகுமார்.
 
தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் ஹோல்டரான இவர், மிஸ்டர் தமிழ் நாடு, மிஸ்டர் மெட்றாஸ் போன்ற பல பட்டங்களை வென்றுள்ளார். இவர் தமிழ் சினிமா நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிய துவங்கியது அர்ஜுன் நடித்த துரை படத்தின் மூலம் தானாம். துரை படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இவரது உடலை பார்த்துவிட்டு தனக்கு உடற்பயிற்சிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments