பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு
எடுக்கப்பட்டு வரும் அசுரன் திரைப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில்
நடித்து வருகிறார் . அசுரன் திரைப்படம் வெற்றி மாறன் மற்றும் தனுஷ்
கூட்டணியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின்
படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள
பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வளர்ந்து வரும் படம் 'அசுரன்'. 'வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷும், வெற்றிமாறனும் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
தனுஷுடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர்
மற்றும் கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இறுதி கட்ட
படப்பிடிப்பை நெருங்கியுள்ள 'அசுரன்' படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாளான
ஜூலை 28ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். 'அசுரன்' படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் தனுஷ். வட சென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள 'பக்கிரி' படம் இம்மாதம் 21-ஆம் தேதி வெளியாகிறது. பக்கிரி, அசுரன் படங்கள் தவிர 'கொடி' படத்தை இயக்கிய துரைசெந்தில் குமார் இயக்கும் படத்திலும் தனுஷ் நடித்து
வருகிறார். இந்த படத்தை 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
Comments
Post a Comment