காஜல் அகர்வால் தனது முதல் காதலரை விட்டு விலகியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அவரின் தங்கை நிஷாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. காஜலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். பெற்றோர் ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்க்க காஜல் மறுபக்கம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
காஜல் அகர்வால் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பாதவர். அவர் வாழ்வில் காதல் வந்ததா இல்லையா என்று இதுவரை வாய் திறக்காமல் இருந்தவர் முதல்முறையாக காதல் வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். காஜல் இந்த அளவுக்கு மாறியதற்கு என்ன காரணமோ என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.
நான் ஒருவரை காதலித்தேன். அந்த நபர் நான் நடிகையாகக் கூடாது என்று கூறினார். திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்குமாறு தெரிவித்தார். என்னை நடிக்கக் கூடாது என்று அவர் கூறியது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரை விட்டு விலகினேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காதலரை விட்டு பிரிந்த பிறகு காஜல் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். தனக்கு பிடித்த ஒன்றை செய்யக் கூடாது என்று கூறுபவருடன் சேர்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை கசப்பாகத் தான் இருக்கும் என்று ஆரம்பித்திலேயே காதலை முறித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கடந்த மே மாதம் வெளியான சீதா தெலுங்கு படத்தை காஜல் மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. வித்தியாசமாக நடித்ததால் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்துள்ளார் காஜல்.
முன்னதாக த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று வருண் கூறியதால் த்ரிஷா அவரை விட்டு விலகினார். கடைசி மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் த்ரிஷா. இந்நிலையில் சினிமா மீது உயிரே வைத்திருக்கும் த்ரிஷாவை போன்றே காஜல் அகர்வாலும் செய்தது தெரிய வந்துள்ளது. முதல் காதல் என்பது மிகவும் ஸ்பெஷலானது. அந்த காதலை காஜல் சினிமாவுக்காக கைவிட்டது ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
Comments
Post a Comment