சூர்யாவின் 'என்.ஜி.கே.' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள்: ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்!

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'என்.ஜி.கே.' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில்
ஒருசில விஷயங்கள் ஒளிந்திருப்பதாகவும், படம் பார்ப்பவர்கள் கூர்ந்து கவனிக்கவும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கும் ரகுல் ப்ரித்திசிங்க்கும் தொடர்பு இருப்பதாக சாய்பல்லவி சந்தேகப்படுவார். ஆனால் சூர்யா-ரகுல் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி எதுவும் படத்தில் இல்லை. இருப்பினும் ஒரு கட்டத்தில் 'ஆமாம் எனக்கும் ரகுலுக்கும் தொடர்பு இருக்குது' என்று சூர்யா ஒப்புக்கொள்வார்.
 
இந்த காட்சி குறித்து ஒரு ரசிகர் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது 'சூர்யாவுக்கும் ரகுலுக்கும் சம்பவம் நடந்ததா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் செல்வராகவன், 'என்.ஜி.கே, வானதி இடையில் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் காட்சியிலேயே இருக்கும்... தேடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து மற்ற ரசிகர்கள், 'இருவருக்கும் சம்பவம் நடந்துருச்சு, அது நடந்த பின்னர்தான் 'அன்பே அன்பே' பாட்டு என்று பதிலளித்து வருகின்றனர். பொதுவாக செல்வராகவன் படத்தில் நிறைய ஜம்ப்பிங்க் காட்சிகள் இருக்கும், அந்த வகையில் 'சம்பவ காட்சியும்' ஜம்ப்பிங் ஆகிவிட்டதாக சிலர் கமெண்ட் அளித்து வருகின்றனர். 

Comments