இசையின் பிள்ளை இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்}

இளையராஜாவின் 76-வது பிறந்தநாள்/இளையராஜா, இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 960 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு, அதோடு, இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது  அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார். இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு..
இளையராஜாவின் மிகச்சிறந்த பின்னணி தீம் இசை என்று சொல்லும் போது அவர் இசையமைத்த   திரைப் படங்களுக்காக உருவாக்கிய கருப்பொருள் இசைத்துணுக்கு (Theme Music) அல்லது படங்களின் தொடக்க பின்னணி இசை (Title BGM) என்பதைக் குறிப்பதே.

பல படங்களில் அவர் தந்த முன்னணி தலைப்பு இசையே படத்தோடு நம்மை ஒன்றிணைத்துவிடும் என்பது மட்டுமல்ல படத்திற்கு முகவரி, அடையாளம் தந்ததே அந்த தீம் இசைகளே என்பது மறுக்கமுடியாத உண்மை.

25 முன்னணியான பின்னணி தீம் இசை துணுக்கு அமைந்த திரைப்படங்களின் வரிசைகளை காண்பதற்கு முன்னதாக ஒரு நிஜத்தை கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அதாவது,


1976 லிருந்து இன்று 2019 வரை உள்ள வருடங்களில் 

இளையராஜா தமிழனுக்கு கொடுத்த  

ஏறக்குறைய 7000 பாடல்களை நீக்கி விட்டு பார்த்தால் 

எப்படித்தான் இருந்திருக்கும் தமிழகம்.


ஒரு கற்பனை, ஆனால் நிச்சயமான உண்மை

1. இரவு நேர இதயத்தை வருடிச்செல்லும் தென்றலிசைப்பாடல்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப இயலாமல் போயிருக்கும்,
2. எப். எம். ரேடியோ கேட்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும்,
3. 25 வாரங்கள் ஓடிய நூற்றுக்கணக்கான படங்கள் இருந்திருக்காது, பல நூறு வெள்ளி விழா கேடயங்களுக்கு அவசியமே இல்லாமல் போயிருந்திருக்கும் பலருடைய இல்லங்கள் அவைகளால் அலங்கரிக்கப்படாமல் போயிருக்கும்.
4. தமிழன் ஹிந்தி பாடல்களுக்கு அடிமையாகி போயிருப்பான்; அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள ஹிந்தியும் கற்றுக்கொள்ள தொடங்கியிருப்பான்; தமிழின் நிலை இன்றைய நிலையை விட மோசமான நிலையில் இருந்திருக்கும்.
5. இன்றைய டாஸ்மாக் கால் பாதிக்கப்பட்டவர்களை விட, மன வியாதியில் பித்து பிடித்தவர்கள் அதிகம் இருந்திருப்பார்கள்.
6. பலரும் காதலிக்காமலே போயிருந்திருப்பார்கள்.
7. அயல் நாட்டில் இருப்பவர் பலர் வாழ்க்கை மீதே பிடிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும்.
8. இன்றைய பல ஸ்டார் நடிகர்கள் ஸ்டார் ஆக்கப்படாமலே காணாமல் போயிருப்பார்கள்,
திடீர் பச்சைத்தமிழனின் சந்தர்ப்பவாத போர்க் கனவு வர வாய்ப்பே இருந்திருக்காது.
9. தமிழுக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை என்று முடிவே கட்டியிருப்பார்கள். கன்னட இசைக்கான மொழி தெலுங்கு என்ற கற்பித பொய் ஆணித்தரமாக நிறுவப்பட்டிருக்கும். இதையெல்லாம் இன்றும் உணராத தமிழன் தனக்கென இசை வரலாறு கூட இல்லை என்று அவமானப்பட்டிருப்பான்.
10. 80 - 90 களில் கேசட் கடைகளும், சி.டி. கடைகாரர்களும், வேறு வேலைகள் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.
11. பேருந்துகள் செவி வறட்சியான பயணங்களைக் கொண்டதாக ஆகியிருக்கும்.
12. பண்ணைப்புரம் ஊர் பெயர் தமிழகத்துக்கு தெரியாமலே போயிருக்கும்.
13. புத்தாண்டா, பொங்கலா, தாய்மை உணர்வா, காதலா, பிரிவு சோகமா, எல்லாச் சூழ்நிலைக்குமான பாடல் கிடைக்காமல் போயிருக்கும்.
14. அவரின் மூலம் உருவான மற்றும், அவருக்கு மாற்றாய் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஏ. ஆர்.ரகுமான் கிடைக்காமல் போயிருப்பார். இரண்டு ஆஸ்கர் கிடைக்காமலே போயிருக்கும்.
15. யூ டியூப் ல், செவிக்கினிய பாடல் இல்லாமல், மைக்கில் ஜாக்சன் போன்றவர்களின் பாடல்களைக் கேட்பவனாய் போயிருப்பான் தமிழன்.
16. இதோ பார் எங்க பாட்டு, எங்க இசை, எங்க இசையமைப்பாளன் என்ற பெருமிதம் வராமலேயே செத்து போயிருப்பான் பெரும்பாலான தமிழன். (இன்னும் கூட இசைஞானிக்கு உரிய அங்கீகாரம் தர மறுக்குது ஆரிய இந்தியம்)
17. கல்லூரிகளில் ஆண்டு விழாக்களுக்கு, பாடல், நடனங்களுக்கு பாடல்கள் இல்லாமலே போயிருந்திருக்கும். கவிதையும், பேச்சுப்போட்டியும் மட்டுமே பெரும்பாலும் நடத்தப் பட்டிருக்கும்.
18. "பிளட்கேன்சர்", முக்கோணக்காதல், பழிவாங்கல் - போன்று ஒரே படிமான படங்களாய் தொடர்ந்து வந்தாலும் கூட அவரின் பாடல்களால் தப்பிப் பிழைத்த, வாகை சூடிய இயக்குனர்களை இழந்திருக்கும்.
19. வரலாற்றில் சில காலத்தை இருண்ட காலம் என்று சொல்வதைப்போல, (80-2000) கால கட்டத்தை குறிப்பாக 80 களை தமிழக இசையின் இருண்ட காலம் என்றே மாணவர்கள் படித்திருப்பார்கள். (இன்றைக்கும் திரைப்படங்களில் "1980 கள்" என்ற கால கட்டத்தை குறித்துக்காட்ட இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத தேவை)
20. வைரமுத்து போன்ற கவிஞர்களின், எஸ்.பி.பி. போன்ற பாடகர்களின் ஆளுமை முழுமை அடையாமல் போயிருந்திருக்கும்.
21. சிறந்த நவீன இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடகி பவதாரிணி போன்றவர்களை இழந்து போயிருக்கும்.
22. 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இராட்சச திறமை படைத்த இசைப்பிரம்மம் தமிழ்நாட்டுக்கு அடையாளமாய் இல்லாமல் போயிருக்கும். (திருவள்ளுவர் போல இவரும் குறைந்தது 1330 படங்களுக்கு இசையமைக்கவேண்டும்)
23. இருக்கும் 72 தமிழிசை ராகங்களுக்கு மேலாக பஞ்சமுகி என்ற புதிய ராகம் கண்டுபிடிக்கப்படாமலே போயிருக்கும். காண்க:
24. தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டு தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்பவர்களின் தெலுங்கு மொழி கீர்த்தனைளே முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நாட்களில் தமிழிசையை திரையிசை மூலம் நிறுவி இனி வரும் எதிர்கால சந்ததி தமிழிசை மேன்மையை தெரிந்து கொள்ளவும், வளர்க்கவும் வழி இல்லாமல் போயிருந்திருக்கும்.
25. கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.[காண்க] ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. காண்க:
தமிழிசையின் தொன்மையை தென்னிந்திய மொழிகள், வட இந்திய ஹிந்தி மொழி என அனைத்திலும் இந்த நூற்றாண்டில் ஆழப்பதிக்க ஆள் இல்லாமலே போயிருந்திருக்கும். (தமிழரின் 2500 ஆண்டு தொன்மையுடைய மதுரை கீழடியை மூடி மறைக்க பார்ப்பது போல், தமிழிசை வரலாறும் மூடி மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் இசைஞானி மீட்டு கொடுத்திருக்கிறார்)





 இளையராஜாவின் இசைக்கு அப்படி ஏன் தனிச்சிறப்பு 

# பிரபஞ்சத்தின் பஞ்சபூதத்தையும் இசைக்குறிப்பின் அஞ்சு கோட்டுக்குள் அடக்கிய இசை
(இயற்கை இசை, தமிழிசை)

அன்னக்கிளி அபசகுனத்தில் இருந்து லண்டன் ராயல் சொஸைட்டி வரை... இசைஞானி!

தனது இயற்பெயரையே பட்டப்பெயராக பெற்றவர் இளையராஜா ஒருவராக தான் இருக்க வேண்டும். ஞானதேசிகன் என்பது இளையராஜாவின் இயற்பெயர். சினிமாவில் இளையராஜாவாக இருந்தவர். தனது இசை பயணம் மற்றும் வெற்றிகள் மூலம் தனது இயற்பெயரின் முதல் பாதியான ஞானத்தை இசைஞானி என்ற பட்டப்பெயர் மூலம் பெற்றார். Birthday Special: Lesser Known Facts and Biography about Isaignani Ilayaraja ஏறத்தாழ நாற்பதாண்டு கால பயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா. இனி யார் ஒருவரும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைக்க முடியாது. ஏறத்தாழ வருடத்திற்கு 25 படங்கள் என்ற விகித்ததில் அமைகிறது இளையராஜாவின் இந்த சாதனை. கர்நாடக இசையில் பஞ்சமுகி என்ற ராகத்தை உருவாக்கியவர் / கண்டுபிடித்தவர் இசைஞானி என்று அறியப்படுகிறது. இன்று தனது 76வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கும் இசைஞானி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இனி.... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் poonththalir-kollywood.blogspot.com 
 
 ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்கில் படித்தவர் இசைஞானி இளையராஜா. இதே கல்லூரியில் தான் ஏ.ஆர். ரஹ்மானும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980களில் இளையராஜாவின் குழுவில் ரஹ்மான் இணைந்து இசைக் கருவிகள் வாசித்து வந்தார். இளையராஜா ட்ரினிட்டி காலேஜில் படித்தப் போது கிளாசிக்கல் கிட்டாரில் தங்க பதக்கம் பெற்றவர் ஆவார். அன்னக்கிளி... அன்னக்கிளி... தனது முதல் படத்திற்காக இளையராஜா ஸ்டூடியோவிற்கு வந்த போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. சில நேரம் மின்சாரம் வருவதற்காக காத்திருந்தனர். மின்சாரம் வந்த பிறகு அவன் முன்னர் வாசித்து வைத்திருந்த இசை கோப்புகள் தொழில்நுட்ப கோளாறால் சேமிக்கப்படாமல் போனது அறியவந்தது. மீண்டும் முதலில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து இசை வேலையை முடித்துக் கொடுத்தார் இளையராஜா. அக்காலத்தில் இப்படியான விஷயங்கள் அபசகுனமாகவே காணப்படும். ஆனால், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் இந்திய சினிமா உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின என்று தான் கூறவேண்டும். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்தி பாடல்களின் ஆளுமை இருந்து வந்த நேரத்தில்... தனது பாடல்கள் மூலம் அனைவரையும் தமிழ் பாடல்கள் பக்கம் ஈர்த்தார் இளையராஜா. பெயர் காரணம் பெயர் காரணம் இளையராஜா தமிழ் திரை உலகில் அறிமுகமான போது, ஏற்கனவே ராஜா என்ற இசை அமைப்பாளர் இருந்தார். எனவே, இவரது பெயரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, ஜூனியர் ராஜா என்று வைத்துக் கொள்ளலாம் என சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால், கொஞ்சம் புதுமையாக இருக்கட்டும் என்று பிறகு இளைய ராஜா என்று வைத்தனர். இந்த பெயரோடு தான் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்திய இசை உலகை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கிறார் இளையராஜா. ஸ்டீரியோ ஃபோனிக் ஸ்டீரியோ ஃபோனிக் தமிழ் திரை இசைத் துறையில் ஸ்டீரியோ ஃபோனிக் இசையை அறிமுகம் செய்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் நடித்த ப்ரியா என்ற படத்தில் கே.ஜே. யேசுதாஸ் பாடலில் ஸ்டீரியோ ஃபோனிக் முயற்சி செய்தார் இளையராஜா. இது அன்று பெரும் சென்சேஷனலாக மாறியது என்று கூறப்படுகிறது.
 
 ராக்கம்மா ராக்கம்மா மணிரத்னம் - இளையராஜா கூட்டணி கடைசியாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் தளபதி. இந்த படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கைய்யத்தட்டு பாடல் அதிமான முறை கேட்கப்பட்ட பாடல் என்று பிபிசியால் தகவல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கமலுக்காக... கமலுக்காக... ஹே ராம் படத்திற்கு ஒரு வீடியோவின் இதழ் அசைவை வைத்து இசை அமைத்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இளையராஜா. ஏற்கனவே வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து இசை அமைத்து வீடியோ காட்சிகள் எடுத்துவிட்டனர். அதன் பின்னரே இளையராஜாவிடம் வந்தனர். மீண்டும் இசை அமைத்து காட்சி படுத்த வேண்டும் என்றால் செலவாகும் என்று கருதி. ஏற்கனவே நடிகர்கள் இதழ் அசைத்த காட்சிகளை வைத்து அதற்கு இசை அமைத்துள்ளார் இளையராஜா. இதை இளையராஜாவின் ஆயிரமாவது படத்தின் விழாவின் போது மேடையில் அமிதாப்பச்சன் கூறி இருந்தார். ஆல்பங்கள்... ஆல்பங்கள்... Nothing But Wind, How To Name It, போன்ற ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார் இளையராஜா. இந்த இசைகளை தனது வீடு என்ற திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார் பழம்பெரும் இயக்குனர் பாலு மகேந்திரா. இந்த இரண்டு இசை ஆல்பங்களுமே பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் இசை கலைஞரால் பெரிதும் பாராட்டப்பட்ட இசை ஆகும். கரகாட்டக்காரன் கரகாட்டக்காரன் உலகத்தரத்திலான ஒரு கிராமத்து இசையை கொடுத்திருந்தார்
 
கரகாட்டக்காரன் என்ற படத்தில். இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் பல திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. இந்த படத்தில் இடம்பெற்ற மாரியம்மா என்ற பாடலை கேட்டு திரையரங்கிலேயே ஒரு பெண்ணுக்கு சாமி வந்தது என்ற தகவல் வெகுகாலமாக கூறப்பட்டு வருகிறது. ரஜினி - அமிதாப்பச்சன் ரஜினி - அமிதாப்பச்சன் இந்தியாவின் இரண்டு பெரும் சுப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி மற்றும் அமிதாப்பச்சனை பாட வைத்த பெருமை இளையராஜாவையே சேரும். ரஜினி பாடிய பாடலை காட்டிலும், பா படத்தில் அமிதாப்பச்சன் பாடிய பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. சிம்பனி! சிம்பனி! இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா ஆஸ்கர் அல்லது கிராமி விருதுகள் வென்றதில்லை தான். ஆனாலும், இசைக்கான அவரது அர்பணிப்பு மற்றும் வேலைப்பாடுகள் மிகுந்த மதிப்பிற்குரியவை. லண்டனின் ராயல் பில்ஹார்மோனிக் சொஸைட்டிக்காக இளையராஜா அமைத்த சிம்பனியானது ஆஸ்கர், கிராமிக்கு நிகரானது. ராயல் பில்ஹார்மோனிக் சொஸைட்டிக்காக சிம்பனி எழுதிய முதல் ஆசிய இசை அமைப்பாளர் இளையராஜா என்பது பெருமைக்குரியது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 
# ஐன்ஸ்டீனின் சார்புக்கொள்கையின் விதியை மீறி ஒளி வேகத்தைக் காட்டிலும் வேகமாய் இசையமைத்த இசை விஞ்ஞானி (பாடல் உருவாக்க வேகம், ஒரு வருடத்தின் 52 வாரங்களில் 40 படங்கள், அதுவும் பெரும்பாலும் வெள்ளிவிழா படங்கள், 100 நாள் படங்கள், வெற்றிப்படங்கள்)

1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 43 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில்தான் இந்த 43 ஆண்டுகள், ஆனால், இப்படிப்பட்ட இசை மேதைகள் பிறந்ததிலிருந்தே மேதைகள் என அவருடன் பயணித்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
 
76ம் ஆண்டில் தன் பெயரிலான அதிகாரப்பூர்வ இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 76வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம்.எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா.
 
உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்...

Comments