ஹோம்லியாக நடித்தாலும் கவர்ச்சியாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்: கவர்ச்சிக்கு மாறிய நந்திதா!

அட்ட கத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பெங்களுரை சேர்ந்த இவர் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக குமாதா என்ற கேரக்டரில் நடித்து பெயர் வாங்கினார்.தொடர்ந்து பல படங்களில் ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த நந்திதா திடீரென கவர்ச்சிக்கு மாறி பிரபுதேவாவுடன்
 
தேவி படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு படமான 7 என்ற படத்திலும் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். ஹோம்லியாக நடித்தாலும் கவர்ச்சியாக நடித்தாலும் தன்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். தமிழில் வரும் வாய்ப்புகளை விட தெலுங்கில் அதிக படங்கள் வருகிறது. அதில் பல படங்கள் ஹிட் ஆனதால் அங்கே நான் முன்னணி நடிகையாக உள்ளேன். இந்தி படத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Comments