நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.சௌந்தர்யாக்கும் அஸ்வினுக்கு வேத் என்ற மகன் இருக்கிறான்.
அவருடனான புகைப்படத்தை எப்போதும் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் ஷாக் கடைந்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் ‘சமூக வலைதளத்தில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடும் முன்னர் ஜாக்கரதையாக இருங்கள். இது போன்ற புகைப்படங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.
Comments
Post a Comment