நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை பாராட்டிய சிவா, விக்கி, வெங்கி!

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் ஒரு பார்வை சென்னை: நேர்கொண்ட பார்வை பட ட்ரெய்லரை பார்த்த கோலிவுட் பிரபலங்கள் அதை பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது. ட்ரெய்லரை பார்த்த கோலிவுட் பிரபலங்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்...
 
***********************************************************************************

விக்னேஷ் சிவன் நம் தல அஜித் சார் மற்றும் எனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான வினோதிடம் இருந்து மாஸ் மற்றும் கிளாஸ் படைப்பு. இந்த படத்தை தேர்வு செய்த அஜித் சாருக்கு பாராட்டுக்கள். இதை மக்களிடம் கொண்டு செல்லும் போனி கபூர் சாருக்கு வாழ்த்துக்கள். நேர்மையான பிளாக் பஸ்டர் ஆகும் இந்த நேர்கொண்ட பார்வை என்று மனதார வாழ்த்தியுள்ளாார் இயக்குநர் விக்னேஷ் சிவன். பிற இயக்குநர்களின் படைப்பை இப்படி பாராட்ட பெரிய மனது வேண்டும். அது விக்கியிடம் உள்ளது..
 
***********************************************************************************
 வெங்கட் பிரபு தல ரசிகரான வெங்கட் பிரபுவுக்கு நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரில் அஜித் சொன்ன, 'ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என்ற வசனம் பிடித்துள்ளது. வெங்கட் பிரபுவுக்கு மட்டும் அல்ல அனைத்து ரசிகர்களுக்குமே இந்த வசனம் மிகவும் பிடித்துள்ளது...
 
***********************************************************************************
ஆதிக் என்ன ஒரு ட்ரெய்லர், தல அஜித் சார் நடிப்பு, வசனங்கள், மேனரிசம் செம என்று பாராட்டியுள்ளார் இயக்குநரும், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவருமான ஆதிக் ரவிச்சந்திரன். 'ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என்ற வசனத்தை கேட்டு அவருக்கு புல்லரித்துவிட்டதாம்.
 

Comments