7 ( செவன்) படம் மூலம் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ரெஜினா கசான்ட்ராவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘எவரு’. சீட் எட்ஜ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் சார்பில் பேர்ல் வி.பொட்லூரி, பரம் வி.பொட்லூரி, கவின் அன்னே ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ரெஜினாவுடன், ‘சனம்’ புகழாத்வி ஷேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்திருக்கும் முரளி சர்மா நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் வெங்கட் ராம்ஜி இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.










Comments
Post a Comment