நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்துச் சென்றார்.பல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டுச்
சென்றார். காலை சைக்கிளிங் சென்ற ஆர்யா, அப்படியே வந்து வாக்களித்து விட்டு சென்றதாக கூறினார்.
மேலும் செய்தியாளர்க,ம் பேசிய ஆர்யா, "இந்த தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டிடம் உருவாக விஷால், கார்த்தி ஆகியோர் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். இரு அணியினரும் அமர்ந்து பேசி சமரசமாக ஒரு முடிவை எடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment