அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்று. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த, கொலையுதிர்காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அப்போது முதலே, திமுக.,வின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராதாரவி. இவர் மீண்டும் அதிமுக.,வில் இணைய இருப்பதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

Comments
Post a Comment