சர்ச்சையில் சிக்கிய விஜயின் தந்தை! - எஸ்.ஏ.சிக்கு பெண்கள் எதிர்ப்பு!

விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது 70 வது படத்தை இயக்கி வருகிறார். படங்கள் இயக்குவதோடு சமீப காலமாக நடிக்கவும் செய்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது 70 வது படத்திற்கு ‘கேப்மாரி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெய், அதுல்யா ரவி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
 
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ”தற்போதுள்ள பெண்கள் எல்லாம் ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்கின்றனர்” என்று கூறினார்.
 
அவரது இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைப் பற்றிய தவறான கருத்தை பொதுமேடையில் கூறிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பெண்கல் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Comments