மகனை தொடர்ந்து மகளையும் நடிக்க வைத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து 3வது முறையாக அருண் குமாருடன் சிந்துபாத் படத்தில் இணைந்து இருக்கிறார். இதில் அவருடன் அஞ்சலி மற்றும் அவர் மகன் சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.இது குறித்து கூறிய விஜய் சேதுபதி, “அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும்,
 
அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பான வளாகவும் வடிவமைப்பார். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
 
நான் அவருக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். அது பாடங்களை விட மிகவும் முக்கியம். படிப்புக்கும் முக்கியத்துவம் தர சொல்லி இருக்கிறேன்.சங்கத்தமிழன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் என் மகளும் நடிக்கிறார். மகன் நடிக்கும்போது மகளை நடிக்க வைக்கவில்லை என்றால் பாலின பாகுபாடு வருமே.” என்றார்.

Comments