வாட்ச்மேன் படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானா சம்யுக்தா நெருக்கம் காட்டும் நபர் யார்?

கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம், பதினேழு வயதில் நடிகையானவர் பெங்களூருவைச் சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் நடித்து வருகிறார். இது தவிர, தீயல் படத்திலும் நடித்து வருகிறார்.
 
எந்நேரமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் சம்யுக்தா முக்கியமானவர். தன்னைப் பற்றி ஏதோ ஒரு தகவலை வெளியிட்டு, பரபரப்பாகவே தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது, தன்னுடைய செக்சியான படங்களை வெளியிட்டும் பரபரப்பு கிளப்பிக் கொண்டே இருப்பார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர், அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

 
அப்படித்தான், அவர் சமீபத்தில் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். அங்கு, வெளிநாட்டவர் ஒருவருடன் அவர் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அந்தப் புகைப்படத்தில் தன்னோடு இருப்பவர் யார் என்பது குறித்தத் தகவலை அவர் வெளியிடவில்லை. அவர் யார் என்ற தேடுதலில் இப்போது, அவரது ரசிகர்கள் களம் இறங்கி உள்ளனர்.

Comments