டிடெக்டிவ் படம் என்றால் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் படம் ஜேம்ஸ் பாண்ட் தொடர்கள்தான். தற்போது இந்த தொடர் 25வது படத்தை எட்டியுள்ளது. கடந்த பாகத்துடன் நான் இனி ஜேம்ஸ் தொடர்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிய டேனியல் கிரேய்க்தான் இந்த 25வது படத்திலும் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதுவரை பெயர் சூட்டாமல்
‘பாண்ட் 25’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
‘பாண்ட் 25’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பக்கிங்ஹம்ஷயரில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டுடியோ ஆட்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து படக்குழு கூறியது, இது போன்ற விஷயங்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். கேமரா சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் விசாரணையிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம். ரகசிய கேமரா விவகாரம் தொடர்பாக பீட்டர் ஹார்ட்லி என்பவரை சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக போலீசார் பின்பு தெரிவித்தனர்.
முன்னதாக ஜமைக்காவில் படப்பிடிப்பு நடந்த போது டேனியல் கிரெய்கிற்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த மே மாதம் டேனியல் கிரெய்கிற்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிரெய்க் குணமாகி வரும் நேரத்தில் பிற நடிகர்கள், நடிகைகள் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment