கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி..!சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்!

கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிட உள்ளார் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருக்கும் நடிகர் கார்த்தியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.எனவே தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
 
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் விஷால் அணி மீண்டும் போட்டியிடும் அதற்கு பெரிதாக எதிர்ப்பு இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்கள் வரை விஷாலுடன் ஒன்றாக இருந்த பலர் இப்போது எதிர் அணியாக திரண்டு நிற்கிறார்கள். குறிப்பாக விஷாலுக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஐசரி கணேஷ் எதிராக நிற்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
எதிர் அணியினர் கே.பாக்யராஜை தலைவராக கொண்டு களம் காண இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக தற்போதைய பொருளாளர் கார்த்தி ஒரு கோடி ரூபாயும், பொதுச் செயலாளர் விஷால் 25 லட்சமும் நன்கொடை வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேர்தல் நடத்தை முறைகள் அமுலில் இருக்கும்போது தேர்தலில் போட்யிடுகிறவர்களே இதுபோன்று நிதி தருவது தேர்தல் நடத்தையை மீறிய செயலாகும் என்ற புகார் எழுந்துள்ளது.

Comments