அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது!

மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து 'ஆடை' என்ற படத்தை இயக்கியுள்ளார்.நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு  தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 19-ந் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments