ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோதிகா பேசியதாவது
அரசு பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து ஒருசில படங்கள் வந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் கூறப்பட்டுள்ள மெசேஜும், காட்சிகளும் ரொம்ப புதுசாக இருக்கும். அதேபோல் ஒரு அப்பா-மகள் உறவும் இந்த படத்தில் வித்தியாசமாக காண்பிக்கப்பட்டுள்ளது. அப்பா-மகள் உறவு குறித்து நீங்கள் பல படங்கள் பார்த்திருந்தாலும் இந்த படம் பார்க்கும்போது நீங்கள் வித்தியாசமாக உணர்வீர்கள்
இயக்குனர் கவுதம் திருமணத்திற்கு முன் எப்படி இவ்வளவு மெச்சூராக இருக்கின்றார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் அரசு பள்ளியில் நடக்கும் விஷயங்களை அவ்வளவு ஆழமாக, தெளிவாக படத்தில் அவர் சொல்லியுள்ளார். அதன்பின்னர் தான் எனக்கு தெரிந்தது அவரே அரசு பள்ளியில் படித்தவர் என்பது. அதனால்தான் பிரச்சனையின் ஆழம் அவருக்கு தெரிந்திருக்கின்றது. புதிய இயக்குனராக இருந்தாலும் அவருடைய பாணி எனக்கு பிடித்திருந்தது. எனவே அவருடன் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரியவுள்ளேன்' என்று ஜோதிகா கூறினார்
Comments
Post a Comment