விஜய்யுடன் தனது முதல் சந்திப்பு குறித்து முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட; உன்னி முகுந்தன்!

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழ் திரையுலகம் தாண்டியும் மோகன்ல்லால், துல்கர் சல்மான் என மற்ற மொழி திரையுலக பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துச்செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதில் பிரபல மலையாள முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி மற்றும் பிகில் பட அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சி என இரண்டையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விஜய்யுடன் தனது முதல் சந்திப்பு குறித்து முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் உன்னி முகுந்தன்.
 
தமிழில் இவர் தனுஷுடன் இணைந்து சீடன் என்கிற படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் காட்சிக்கு விஜய்யும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே விஜய்யை முதன்முதலாக நேரில் பார்த்ததும் அவரது எளிமையும் அமைதியும் உன்னி முகுந்தனை அசத்தி விட்டதாம். அப்போது தன்னைப்பற்றி விஜய்யிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள அவர் தடுமாறியபோது விஜய் சிரித்தபடியே அவரை ஆசுவாசப்படுத்தினாராம். அந்த கணத்தில் இருந்தே தீவிர விஜய் ரசிகனாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.

Comments