கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் டியர் காம் ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 26-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த ஜோடி இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் இதையடுத்தும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், திரைக்குப்பின்னால் விஜய் தேவர கொண்டா-ராஷ்மிகா இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும், அவர்களுக்கிடையே காதல் உருவாகியிருப்பதாகவும் டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.ஆனபோதும், இதற்கு எந்தவித பதிலும் கொடுக்காமல் விஜய்தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் வழக்கம்போல் ஜாலியாக சுற்றித்திரிவதாகவும் டோலிவுட் மீடியாக்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment