காமெடி தர்பார்’ என மாறிய ‘அல்வா’ நாடகம்!எஸ்.வி.சேகரின் நாடகம் வேறு இடத்திற்கு மாற்றம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முதலில்  எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .ஆனால் அதே இடத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருந்தார்.
 
ஆனால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நடத்த அனுமதி கிடைக்கவில்லை .மாற்றாக மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி கிடைத்து தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரில் இன்று நடைபெற இருந்த எஸ்.வி.சேகரின் நாடகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ‘அல்வா’ என்று பெயர் வைத்த நாடகம் காமெடி தர்பார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் நாடக தலைப்பை மாற்றியது  தொடர்பாக எஸ்.வி.சேகர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன்.மேலும்  இடத்தை  மாற்றியது தொடர்பாக அவர் கூறுகையில்,அவர்கள் தேர்தலுக்கு இடத்தை மாற்றினார்கள்.அதனால் நானும் மாற்றினேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments