ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்" படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி படக்குழுவினரை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்து படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும், போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி ஸ்டைலாக நடந்து வரும் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
#Thalaivar #DARBAR video
#Thalaivar #DARBAR video
Comments
Post a Comment