இறுதிசுற்று படத்தில் கிக் பாக்ஸராக நடித்தவர் ரித்திகா சிங். நிஜத்திலும் இவர் கிக் பாக்ஸர்தான். அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்தவர் திடீரென்று காணாமல் போனார். பிறகு ரித்திகாவை இணைய தள பக்கத்தில்தான் காண முடிந்தது. அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிடத் தொடங்கி தனது இருப்பை காட்டி வந்தார். அதற்கு பலன்
கிடைத்திருக்கிறது. அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார் ரித்திகா சிங்.
விளையாட்டு செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளராக வரும் ரித்திகா சிங் இப்படத்தில் பாக்ஸிங் சண்டை காட்சியில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விவேக் இயக்கும் இப்படத்தில் பாக்ஸர் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் தனது கதாபாத்திரத்துக்காக வியட்நாம் சென்று மார்ஷல் கலைகளில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.
Comments
Post a Comment